அரசியல்

ஈனப் பெருஞ்சுவரே! ஸ்டாலின் மானத்தை கப்பலேற்றிய கட்சிக்காரர்



திமுக செயல் தலைவர் மு.. ஸ்டாலினின் பிறந்த நாளை கொண்டாடிய தொண்டர்கள் சிலர் வழமைபோல போஸ்டர்களால் சுவர்களை நிரப்பினர். அதில் ஒருவர் ஒட்டிய போஸ்ட்டரால் ஸ்டாலின் கதி கலங்கி இருக்கிறார்.

. சிம்சோன் என்னும் திருவள்ளூர் மாவட்டத்தின் திருக்கண்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகி மு.. ஸ்டாலினை வாழ்த்தி போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார். அந்த போஸ்டரில் 'எங்கள் மானம் காக்கும் ஈனப்பெருஞ்சுவரே' என்று எழுதப்பட்டிருந்ததை பார்த்து திமுக வட்டாரமே ஆடிப் போயுள்ளது.


தமிழக அரசியல் கட்சிகளை சேர்ந்த அல்லக்கைகள் தமது தலைவரை தலைவியை வாழ்த்துவதாக எண்ணி தமிழ் எழுத்து, பொருட்பிழையுடன் சுவரொட்டிகளை ஓட்டுவது தொடர்ந்தே வருகிறது. அதில் ஒரு படி மேலே போய் இப்போது தமது தலைவரையே ஈனத்தலைவர் ஆக்கி இருக்கிறார்கள். வாழ்த்துகள் தலைவரே..

0 comments:

Post a Comment

Powered by Blogger.