சசிகலாவுக்கு போட்டியாக இருப்பார் நம்பப்பட்ட தீபாவின் நிலை தற்போது பரிதாபமாக இருக்கிறது.
தீபாவின் பேரவையில் இருந்த 300 பேர் ஓ.பி.எஸ்.அணியில் போய் சேர்ந்திருக்கிறார்கள். ஒரே தடவையில் ஆர்கே.நகர் தொகுதியைச் சேர்ந்த 300 தொண்டர்கள் ஓ.பி.எஸ்.அணிக்கு தாவியுள்ளனர். அதே சமயம் ஓ.பி.எஸ். அணி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே தீபா சார்பு தொண்டர்கள் ஓ.பி.எஸ். அணிக்கு போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஓ.பி.எஸ். பிரிந்த சில நாட்களில், ஓ.பி.எஸ்.ஐ சந்தித்து தீபா இணைந்து செயல்பட போவதாக கூறியிருந்தார். பின்னர் அதை மறந்து விட்டு தனியாக செயல்பட தொடங்கினார். இப்படி நிலையில்லாமல் தடுமாறி வருகிறார் தீபா.
ஆர்.கே.நகரில் வேட்பாளராக போட்டியிட்டு சசிகலா தரப்பு தினகரனை தோற்கடிக்கப் போகிறேன். அ.தி.மு.க.வை மீட்கப்போகிறேன். போயஸ் தோட்டத்தை மீட்கப்போகிறேன் என்று சொல்லிவரும் தீபாவுக்கு தனது கணவரையே ஆதரவாளராக வைத்திருக்கமுடியவில்லை.
கடந்த வாரம் தீபாவின் கணவர் மாதவன் தனிக்கட்சி ஆரம்பிப்பதாக ஒரு குண்டை வீசினார். ஏற்கனவே சோர்ந்துகிடக்கும் தீபா பேரவைக்கு இது மேலும் கலக்கத்தை கொடுத்தது. செம காமெடி என்று மீம்ஸ் தெறித்தன.
தீபா பேரவை ஆரம்பித்தது முதலே கலகமும் பிரச்சனையாக கிடக்கிறது. தீபா பேரவையில் நடக்கு சம்பவங்கள் மக்களால் காமெடியாகவே பார்க்கப்படுகின்றன. ஆர்.கே.நகர் சூழலும் தீபாவுக்கு சாதகமாக இல்லை என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது.
0 comments:
Post a Comment