அரசியல்

தினகரன் ஒரு கிரிமினல் - ஓ.பி.எஸ். அணி


''ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர் தினகரன். ஜெயலலிதாவுக்கும் அதிமுக.வுக்கும் ஆபத்தான நபர் என்று அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன். அவர் ஒரு கிரிமினல் என்பதால்தான் ஜெயலலிதா அவரை விரட்டியடித்தார். தினகரன் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
சித்தியை வைத்து தினகரன் துணை பொது செயலாளர் ஆகியிருக்கலாம் அடக்கி பேசாவிட்டால் அடக்கி விடுவோம்” 
என்று .பி.எஸ். அணியினர் டி.டி.வி. தினகரனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

500 மேற்பட்டவர்கள் .பி.எஸ்.பன்னீர்செல்வத்தை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதன்போது கருத்து தெரிவித்த .பி.எஸ்.அணியினர் தினகரனுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சரான கே.பி.முனுசாமி  கூறும்போது ''ஜெயலலிதாவை நேரில் சந்தித்தேன் என்று தினகரன் கூறியது பொய். ஜெயலலிதாவால் 2007 இல் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் கடைசிவரை ஜெயலலிதாவை தினகரன் சந்திக்கவில்லை.

தினகரன் ஒரு கிரிமினல். அவர் வாயை திறந்தாலே பொய்தான் சொல்கிறார். தினகரன் இப்படி தொடர்ந்தும் பொய்களை சொல்லிக்கொண்டிருந்தால் அவரது அத்தனை தில்லுமுல்லுகளையும் வெளியிடுவோம் என்று நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறோம்.
தினகரன் நாக்கை அடக்கி பேச வேண்டும் இல்லாவிட்டால் நாங்கள் அடக்குவோம்'' என்றார்.

''சசிகலா குடும்பம் எல்லாவற்றையும் ஆண்டு அனுபவிக்க நினைக்கிறது. விரைவில் சசிகலாவுக்கு போட்டியாக தினகரன் வந்துவிடுவார்

இப்படிப்பட்ட பேராசைக்காரர்களை மோசடிக்காரர்களை தோற்கடிப்போம். ஓபிஎஸ். தலைமையில் இருப்பதே உண்மையான அதிமுக. எனவே ஆர்.கே.நகர் தொகுதியில் எங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.