துருக்கி வெளிநாட்டமைச்சர் மெவ்லுட் கவுசோக்ளு, ஐரோப்பா மதத்திற்கான புனித போரை நோக்கி செல்வதாக தெரிவித்துள்ளார்.
துருக்கி, அன்டாலியா நகரில் இடம்பெற்ற அரச ஆதரவு ஊர்வலம் ஒன்றில் பேசும் போதே அவர் இப்படி குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் பேசும்போது ''நெதர்லாந்து அரசியல்வாதிகள் ஐரோப்பாவை ஒரு 'விளிம்புக்கு' இட்டு செல்கிறார்கள். அந்த அரசியல்வாதிகளிடையே இடது சாரி வலது சாரி வித்தியாசம் இல்லை. எல்லோரும் ஒரே போலவே இருக்கிறார்கள். அவர்களது சிந்தனை ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இது ஐரோப்பாவை ஒரு புனித போருக்கு இட்டு செல்லுகிறது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை துருக்கி அதிபரின் சர்வாதிகார ஆசைக்கு ஜேர்மனி, நெதர்லாந்து, ஒஸ்ரியா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகள் இடம்கொடுக்காத காரணத்தால் இந்த நாடுகள் மீது அவர் கடும் கோபத்தில் இருக்கிறார்.
தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளை வசை பாடியும் மிரட்டியும் வருகிறார்.
துருக்கியில் நடக்கவிருக்கும் சர்வசன வாக்கெடுப்புக்கு ஆதரவு கோரி துருக்கி அரசால் ஜேர்மனி, ஆஸ்திரியா, நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஊர்வலங்களை நடத்த அந்த நாடுகள் அனுமதியளிக்கவில்லை. இதனால் கோபமடைந்துள்ள துருக்கி அதிபர் எர்டோகன் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருவதுடன் மிகவும் முரட்டுத்தனமான செயல்பாடுகளில் இறங்கியுள்ளார்.
இதனால் ஐரோப்பிய பிராந்தியத்தில் அரசியல் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி அதிபர் எதிர்வரும் ஏப்ரல் 16 ம் திகதி சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.
துருக்கி ஜனாதிபதிக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதே இந்த சர்வசன வாக்கெடுப்பின் நோக்கமாக உள்ளது.
அதிபர் எர்டோகன் கோரும் அதிகாரங்கள் ஒரு நாட்டின் தலைவருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிபர் எர்டோகன் சர்வாதிகாரத்தை நோக்கி விரைவாக பயணித்து வருவதாக பலரும் கருதுகின்றனர்.
எர்டோகனின் ஜனநாயக விரோத நடவடிக்கையை புரிந்துகொண்ட ஐரோப்பிய நாடுகள் ஊர்வலங்களுக்கு தடைவிதித்தன.
ஜெர்மனி தடை விதித்ததையடுத்து வெகுண்டெழுந்த எர்டோகன் ஜேர்மன் அதிபரை பயங்கரவாதி, நாஜி என திட்டி தீர்த்தார்.ஜெர்மனியில் 15 இலட்சம் துருக்கி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களை தந்து பக்கம் சாய்க்க செய்த முயற்சிக்கு ஜெர்மனி அதிபர் மார்க்கெல் தடையாக உள்ளதாக எர்டோகன் கருதினார். பயங்கரவாதிகளை ஜெர்மனி மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
தற்போது நெதர்லாந்து தடை விதித்ததையடுத்து அந்த நாட்டுடன் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறார். தனது ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு செல்லப்போவதாக சவால் விடுத்துள்ளார்.
தற்போது துருக்கி வெளிநாட்டமைச்சர் ஐரோப்பாவில் புனிதப்போர் நடக்க போவதாக மிரட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment