நான் சினிமாவுக்கு வந்த நாளில் இருந்து கிட்டத்தட்ட தினமும் பாலியல் பாகுபாட்டால் கேலிக்கும், கிண்டலுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகியுள்ளேன். சினிமா துறையில் ஆண்களுக்கு ஒரு சம்பளம், பெண்களுக்கு ஒரு சம்பளம். பெண் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மரியாதை இல்லை. ஹீரோவுக்கு ரூ.40 கோடி சம்பளம் தருவார்கள். ஆனால் அதில் 10 சதவீதம் கூட ஹீரோயினுக்கு கொடுக்க மாட்டார்கள். இவ்வாறு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார்.
நேர்காணலில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஒரு ஹீரோவால் மட்டுமே படம் ஓடுகிறது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். முன்னணி மலையாள இயக்குனரான அவர் தமிழிலும் படம் எடுத்துள்ளார். அவர் எனக்கு பாலியல் தொல்லைகள் தர முயன்றார். அதை நான் எதிர்த்தபோது படப்பிடிப்பு தளத்தில் வைத்து என்னை அசிங்கப்படுத்தினார். படப்பிடிப்பு தளத்தில் தேவையில்லாமல் என்னை திட்டினார். நான் நன்றாக நடித்தாலும் சில காட்சிகளை 25 டேக் எடுக்க வைத்தார். அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் கூறியதால் நான் அவர் இப்படி செய்தார். அவரை போன்றவர்களை பற்றி நாம் பேசுவது இல்லை.
அண்மையில் ஒரு இயக்குனர் அனுப்பி வைத்ததாக கூறி அவரின் உதவியாளர் வந்து என்னிடம் கதை சொன்னார். கதை சொல்லும்போதே அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி பேசினார். அவர் எந்த அட்ஜெஸ்ட்மென்ட்டை பற்றி பேசுகிறார் என்று தெரிய வந்து அதிர்ந்துபோய் அவரை வெளியே செல்லுமாறு கூறினேன். புத்திசாலி பெண்ணுடன் பணியாற்ற யாரும் விரும்புவது இல்லை. நியாயமான சம்பளம், சம உரிமை கேட்கும் பெண்ணை யாரும் காப்பாற்ற மாட்டார்கள்.
இவ்வாறு பல விடயங்களை அந்த நேர்காணலில் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பாவனாவுக்கு நடந்த பாலியல் தொல்லை பிரச்சனைக்கு பிறகு நடிகைகள் பலரும் தமக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.
0 comments:
Post a Comment