வருடந்தோறும் நடைபெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பாரம்பரியமாக இந்திய மீனவர்கள் பங்குபற்றி வந்துள்ளனர்.
ஆனால் இம்முறை ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதால் இந்திய மீனவர்கள் திருவிழாவில் பங்குபற்றவில்லை.
இந்த படுகொலையை இலங்கை கடல் படையே செய்ததாக இந்திய மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த படுகொலைக்கு நீதி விசாரணை வேண்டும் என்றும் தொடரும் இலங்கை கடல் படையின் அத்துமீறலை நிரந்தரமாக தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரிட்ஜோவை சுட்ட இலங்கை கடற்படை வீரரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கடந்த 7 நாள்களாக ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்படுகொலைக்கு நீதி கிடைக்காமல் கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் தாம் பங்கேற்க மாட்டோம் என திருவிழாவை மீனவர்கள் புறக்கணித்திருந்தனர்.
இந்த நிலையில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இந்திய மீனவர்களின் பங்குபற்றுதல் இல்லாமல் நிறைவு பெற்றுள்ளது.
நேற்று கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் திருப்பலி நேற்று ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந்த திருவிழாவில் இலங்கையைச் சேர்ந்த 6000 இற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நெடுந்தீவு பங்குத்தந்தை ஜெயரஞ்சன் திருவிழா ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மகேஷ் சேனாரத்ன, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன, யாழ் அரச அதிபர் வேதநாயகம் போன்றோர் இந்த திருவிழா நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment