ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடல் படை சுற்று கொன்றதாக கோரி ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் ஒருவார காலமாக மீனவர்கள் போராட்டம் நடத்திவருகின்ற நிலையில் சீமானும் களம் இறங்கியுள்ளார்.
தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் நடத்திவரும் தாக்குதல்கள் படுகொலைகளை கண்டித்து இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலை கண்டித்து தமிழக அரசியல்வாதிகள் மற்றும் உரிமை செயல்பாட்டாளர்கள் தமது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் கடற்படையினர் கூட எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கொலை செய்யாமல் கைது செய்யும் நிலையில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சுட்டு கொல்கிறது என்று நாம் தமிழர் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
இந்த முற்றுகை போராட்டத்தையடுத்து போலீசார் சீமானை கைது செய்தனர்.
0 comments:
Post a Comment