பாலியல் குற்றங்களை தடுக்க மாவட்டம்தோறும் மகளிர் நீதிமன்றம், பாலியல் வழக்குகளில் 6 மாதத்திற்குள் தீர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடிகை வரலட்சுமி நடத்திய கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டார்.
சேவ் சக்தி என்ற இயக்கத்தை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்குடன் தொடங்கியுள்ளதாக நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் வரலட்சுமி நடத்திய கையெழுத்து இயக்கத்தில் ஜெயம் ரவி, விஷால், தன்ஷிகா, சரத்குமார், ராதிகா, உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வரலட்சுமி பாலியல் குற்றங்களை தடுக்க மாவட்டம்தோறும் மகளிர் நீதிமன்றம், பாலியல் வழக்குகளில் 6 மாதத்திற்குள் தீர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட மனுவை தமிழக அரசிடம் அளிக்க உள்ளதாக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விஷால் வரலட்சுமி பிரிவின் பின்னர் அவர்கள் ஒன்றாக இந்நிகழ்வில் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment