இந்தியர்களை குறிவைத்து அமெரிக்காவில் தொடர்ந்து தாக்குதல் இடம்பெறுகின்றன.
பாதிக்கப்பட்ட இந்தியக் குடும்பங்களுக்கு விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரகம் சார்பில் கருத்து வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அரசின் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட இந்தியக் குடும்பங்களுக்கு நிதி அளிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து விசாரணை அமைப்புகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்தியத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
கான்சாஸில் இந்தியப் பொறியாளரான ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா அமெரிக்க கடற்படை முன்னாள் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தெற்கு கரோலினாவில் இந்தியத் தொழிலதிபரான ஹர்தீஷ் படேல் சுட்டுக் கொல்லப்பட்டார். தீப் ராய் எனும் அமெரிக்க வாழ் சீக்கியர் தனது இல்லத்துக்கு வெளியே மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். மேலும் அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் இந்திய இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவங்களையடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் தொகை குறைந்துள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்கள் தமது உறவுகளையும் நண்பர்களையும் அமெரிக்காவுக்கு வரவேண்டாம் என்று எச்சரித்து வருகிறார்கள். புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ட்ரம்பின் இனவாத போக்கே இந்த தாக்குதல்களுக்கு உற்சாகம் ஊட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது போன்ற தாக்குதல்கள் இடம்பெறலாம் என்பதால் இந்தியர்களை பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும்படி அமெரிக்க வாழ் இந்திய சமூகத்தால் வேண்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment