மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது
மீன்பிடிக்கையில் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 7 நாட்களாக நடத்திய போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையை இலங்கை கடல் படையே செய்ததாக மீனவர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்த படுகொலைக்கு நீதி விசாரணை வேண்டும் என்றும் தொடரும் இலங்கை கடல் படையின் அத்துமீறலை நிரந்தரமாக தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரிட்ஜோவை சுட்ட இலங்கை கடற்படை வீரரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கடந்த 7 நாள்களாக ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இப்படுகொலைக்கு நீதி கிடைக்காமல் கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் தாம் பங்கேற்க மாட்டோம் என்று திருவிழாவை மீனவர்கள் புறக்கணித்திருந்தனர்.
இந்த நிலையில் மீனவர் பிரிட்ஜோவின் இறுதியாத்திரை இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் மீனவர் பிரிட்ஜோவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 7 நாட்களாக தங்கச்சி மடத்தில் நடைபெற்ற மீனவர்களின் போராட்டம் தற்காலிக கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment