எமது அரசாங்கம் இன்றோ நாளையோ கவிழ்க்கப்பட்டுவிடும் என்ற கருத்து மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.
இவ்விதமான ஒரு கருத்தை மக்களிடையே பரப்புவதில் ஒரு சிலர் ஈடுபட்டுள்ளனர். ஊடகத்துறையில் சிலரும் இந்த வேலையை செய்து வருகிறார்கள். இது மிக தவறான செய்யக்கூடாத செயல். அரசியல் லாபத்தை நோக்கில்கொண்டு ஊடகங்களில் காட்டப்படும் செய்திகளால்
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று 13 ம் திகதி ஊவா மாகாணத்தின் வெள்ளவாய பிரதேசத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இலங்கை ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
''அரசாங்கத்தில் குறைபாடுகள் இருக்கலாம் செயல்பாடுகள் தொடர்பில் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் எமது அரசாங்கத்தின் வருகையின் பின்னர் நாட்டில் ஊடக சுதந்திரம் உள்ளது.
ஆனால் அதே ஊடகங்கள் நாம் கொடுத்த அதே சுதந்திரத்தை வைத்து எமது அரசாங்கம் கவிழப் போகிறது என்ற தொனியில் மக்களிடம் குழப்பமான செய்திகளை பரப்புகிறார்கள். அந்த செய்திகளை பார்ப்பவர்கள் என்னிடமே நாளையே அரசாங்கம் கவிழ்ந்து விடும் என்று தாம் நினைப்பதாக கூறுகின்றனர். எமது அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிகள் நடப்பதை நாம் அறிவோம். ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்காது'' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக தெரிவித்தார்.
''ஊடகங்களில் காட்டப்படும் கோமாளித்தனமான அரசியல் செய்திகள் மூலம் அரசாங்கத்தை கவிழ்த்து விட முடியாது என்பதை நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன்.
நாட்டை அபிவிருத்தி செய்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதும் எமது கடமை. அதற்காக பதவிக்காலம் முடியும் வரை இந்த அரசாங்கம் செயல்படும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து அடுத்த தேர்தலை சிறப்பாக எதிர்கொள்வோம்'' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment