கொலைக்குற்றம் போன்ற பிரச்சனைகளில் சிக்கி இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு அப்போது ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக இருந்த செங்கோட்டையனின் அறிமுகம் கிடைத்தது. கோபால் எனும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரே இந்த அறிமுகத்தை செய்துவைத்தார். என்றென்றும் உங்களுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதை நம்பி அவரை தன்னுடன் சேர்த்துக்கொண்டார் செங்கோட்டையன்.
பழனிசாமியை சிலுவம்பாளையம் கிளைக் கழகச் செயலாளராகவும் ஆக்கினார்.
செங்கோட்டையன் 1989 தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட பழனிசாமிக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுத்தார். தேர்தலில் பழனிசாமி வெற்றிபெற்றார். 1990-ல் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டச் செயலாளரான பழனிசாமி 1991 சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
2000 ஆண்டு ஜெயலலிதா கட்சியில் மாற்றங்களை செய்தார். அப்போது ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக இருந்த பழனிசாமி, சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எனப் பதவி இறக்கம் செய்யப்பட்டார். பின்னர் எடப்பாடி நகர மன்ற துணைத் தலைவர் பதவி தேர்தலில் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ததால் பழனிச்சாமியின் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் செங்கோட்டையன் பழனிசாமிக்கு ஆதரவு வழங்கி இருந்தார். அவரது நிழலில் வளர்ந்த பழனிசாமி செங்கோட்டையனுக்கு எதிராகவே கள்ள ஆட்டம் ஆடத்தொடங்கினார்.
2003-ம் ஆண்டில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த செங்கோடன் நீக்கப்பட்டு, பழனிசாமி நியமிக்கப்பட்டார். அதன்பின் 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தோல்வி அடைந்தார் பழனிசாமி. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி அடைந்தார். இதனால் இவரிடம் இருந்த மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
எனினும் தனது தந்திரத்தை பழனிசாமி கைவிடவில்லை. சசிகலாவின் உறவினரான ராவணனை கையில் போட்டுக்கொண்டார். இதன் பலனாக மீண்டும் சேலம் மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றார். சசிகலா குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்ததால் 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சரானார்.
செங்கோட்டையனுக்கு தொடர்ந்து துரோகம் செய்தும் அவருக்கு ஆப்படித்தும் தனக்கென ஒரு அதிகார வளையத்தை உருவாக்கினார் பழனிசாமி.
சசிகலாவிற்கு சிறைத் தண்டனை கிடைத்ததால் செங்கோட்டையனுக்கு முதலமைச்சராக வர வாய்ப்பிருந்தது. ஆனால மீண்டும் தனது சசிகலா விசுவாசத்தை காட்டி செங்கோட்டையனுக்கு ஆப்படித்து முதலமைச்சர் பதவியை கைப்பற்றிக்கொண்டார் பழனிசாமி.
0 comments:
Post a Comment