ராணுவத்துக்கான செலவினத்தை முதல்முறையாக 152 பில்லியன் டாலராக சீனா உயர்த்தியுள்ளது.
சீன பிரதமர் லி கெகியாங் பாதுகாப்புக்காக செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளார். சீனாவின் தேசிய ஊடகமான ஜின்ஹுவா திங்கட்கிழமை வெளியிட்ட செய்தியில், "நாட்டின் ராணுவ செலவு 152 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 7% கூடுதல் இந்த ஆண்டு பாதுகாப்புக்காக அரசு ஒதுக்கியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையைவிட இது 7.6 சதவீதம் அதிகமாகும்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 1.3 சதவீதமாகும். நேட்டோ நாடுகளின் சராசரி ஒதுக்கீடு 2 சதவீதமாகும். அமெரிக்க ராணுவ பட்ஜெட் ஒதுக்கீடு 10% அதிகரிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ள நிலையில், சீனாவின் ஒதுக்கீட்டை அதிகம் என்று கூற முடியாது என்று ஜின்ஹுவா தெரிவித்தது.
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் அமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்கவே சீனாவின் பாதுகாப்பு செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ராணுவத்துக்காக சீனா இதுவரை ஒதுக்கிய தொகைகளில் இதுவே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment