சோமாலிய கடற்கொள்ளையர்களால் இந்திய சரக்குக் கப்பல் கடத்தப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து சோமாலியாவுக்கு சென்ற இந்த சரக்கு கப்பலில் 11 மாலுமிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டது தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து அமெரிக்க கப்பல் படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் குறித்த வேறு சரியான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. கப்பலில் இருந்த பணியாட்களின் நிலை குறித்தும் தகவல் எதுவும் வெளிவரவில்லை.
துபாயிலிருந்து சோமாலியாவுக்கு சென்ற இந்த சரக்கு கப்பலில் 11 மாலுமிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டது தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து அமெரிக்க கப்பல் படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் குறித்த வேறு சரியான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. கப்பலில் இருந்த பணியாட்களின் நிலை குறித்தும் தகவல் எதுவும் வெளிவரவில்லை.
"சோமாலிய கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ளது பற்றி அறிய வந்துள்ளோம்" என்று புன்ட்லாண்டின் முன்னாள் இயக்குநர் அப்டிரிஸாக் முகமட் ராய்டஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
சோமாலியாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பட்டினியால் மடியும் நிலை தோன்றியுள்ளது. வறட்சியும் பஞ்சமும் சோமாலியாவை இறுக்கி வருகிறது. கால்நடைகள் செத்து விழுகின்றன.
இந்த சூழலில் தான் பாதிக்கப்பட்ட சோமாலிய மீனவர்கள் கடல்கொள்ளையர்களாக மாறி தமது கடல்பரப்பில் வரும் கப்பல்களை கடத்தி பணம் வாங்கிக்கொண்டு விடுவிக்கிறார்கள்.
2011ல் இவ்வாறு 237 கடத்தல்கள் நடைபெற்றன. சோமாலிய கடல் கொள்ளையர்களால் வருடம் ஒன்றுக்கு 8 பில்லியன் டாலர் நஷ்டம் என்று கப்பல் நிறுவனங்கள் கூறி இருந்தன.
இதையடுத்து கப்பல் முதலாளிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை இறுக்கமாக்கினர்.
அமெரிக்கா, சீனா, மற்றும் ஐரோப்பிய முக்கிய நாடுகள் கடல் கொள்ளையர்களை அடக்க தமது கப்பல் படையை அனுப்பின. இதனால் நிலைமை கட்டுபடுத்தப்பட்டது.
இது ஒருபுறமிருக்க நீண்ட காலமாக வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் சட்டவிரோதமாக சோமாலியாவின் கடலில் மீன்களை வாரிச்செல்லுகின்றன. ஆபத்தான இரசாயன கழிவுகளும் சோமாலிய கடலில் கொட்டப்பட்டன.
இதனால் சிறு வள்ளங்களில் மீன்பிடித்து வந்த சோமாலிய மீனவர்கள் மீன்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.
சோமாலியாவின் கடல் வளத்தை வெளிநாட்டு மீனவர்கள் வாரிச்சென்றதால் மீன்பிடியை நம்பியிருந்த அந்த மக்கள் வறுமையில் வாடினர்.
இதனால் பாதிக்கப்பட்ட சோமாலிய மீவர்களில் சிலர் கடல் கொள்ளையர்களாக மாறினர்.
பெரும் செல்வந்த நிறுவனங்களின் வணிக கப்பல்களை கடத்தி கப்பம் கேட்டனர்.
பெற்ற பணத்தை சில கடல்கொள்ளையர்கள் மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர்.
இதனால் மக்களும் கடல்கொள்ளையர்களை காட்டிக்கொடுக்கவில்லை. ஒருவகையில் அவர்கள் மக்களின் ஆதரவை பெற்றிருந்தனர்.
இந்த சூழலில் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து சோமாலிய கடல்கொள்ளையை அடங்கியிருந்தன. 2012 ம் ஆண்டுக்கு பின்னர் சோமாலிய கடல் கொள்ளையர்கள் வர்த்தக கப்பல்கள் எதையும் கடத்தவில்லை. இதனால் சோமாலியா கடலோரம் சற்று அமைதியாக இருந்தது.
எனினும் கடந்த மாதம் எட்டு இலங்கையர்களை பணியாட்களாக கொண்டிருந்த எண்ணெய் கப்பலொன்று கடத்தப்பட்டதால் மீண்டும் சோமாலிய கடல் கொள்ளையர்கள் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தனர்.
எண்ணெய் ஏற்றி வந்த 1800 தொன் எடையுள்ள Aris 13 எனும் இந்த கப்பல் சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்தது.
பின்னர் இடம்பெற்ற பேச்சுக்களின் பலனாக பணம் எதுவும் வாங்காமல் கப்பலை கைவிட்டு கொள்ளையர்கள் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் சோமாலிய கடல்கொள்ளையர்களால் இந்திய சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment