இப்படி பண்றீங்களே

அமெரிக்க தமிழரிடம் ஆட்டையை போட்ட ஜே.கே.ரித்தீஷ்



 சிவாஜி படத்தில் அமெரிக்காவிலிருந்து தமிழகம் வந்து தொழில் தொடங்க முனையும் ரஜினியை ஏமாற்றி கதறடிப்பார்கள். அதே போல பல சம்பவங்கள் உண்மையில் நடந்தே வருகின்றன.

அமெரிக்காவில் தொழில் செய்த ஆதிநாராயணன் என்பவர் சென்னையில் தொழில் தொடங்க வந்துள்ளார். இதனையறிந்த ஜே.கே.ரித்தீஷ் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு நிறுவனம் தொடங்குவதாக கூறி ஆதிநாராயணனிடம் 2.18 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

ஆதிநாராயணன் பணத்தை வங்கி மூலமாக ரித்தீஷ்க்கு கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்டு ஜே.கே.ரித்தீஷ் என்ற சிவக்குமார் குறிப்பிட்டப்படி நிறுவனம் தொடங்காமல் ஏமாற்றிவிட்டார் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடமும் பலமுறை ஆதிநாராயணன்  புகார் அளித்துள்ளார்.

ஆனால் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. ஜே.கே. ரித்தீஷ் அப்போது எம்.பியாக இருந்த காரணத்தால் தனது செல்வாக்கை பயன்படுத்தி வழக்கு பதியாமல் பார்த்துக்கொண்டுள்ளார்.

எனவே உயர்நீதிமன்றத்தில் ஜே.கே.ரித்தீஷ் என்ற சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆதிநாராயணன் மனு அளித்தார்.

தற்போது ஆதிநாராயாணன் அளித்த புகாரின் அடிப்படையில் மறு விசாரணை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் ஆதிநாராயணன் சொந்த ஊரில் தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இழந்துவிட்டதால் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார்.

தற்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி  ஜே.கே.ரித்தீஷ், அவரது மனைவி ஜோதிஸ்வரி உட்பட 7பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Powered by Blogger.