சிறைக்கு சென்றபின்னர் சசிகலா குறித்த குற்றசாட்டுகள் வெளியாக தொடங்கியுள்ளன.
தனது பங்களாவை சசிகலா பறித்துக்கொண்டதாக அண்மையில் கங்கை அமரன் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அறப்போர் இயக்கம் சார்பில் அதன் நிர்வாகி ஜெயராம் வெங்கடேசன் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.
''அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள், சட்டத்திற்கு புறம்பாக குறிப்பாக காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் தாலுகாவுக்குட்பட்ட சிறுதாவூர், பையனூர், கருங்குழிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு சர்வே எண்களில், அரசு புறம்போக்கு நிலங்கள், குளங்கள் போன்றவற்றை ஆக்கிரமித்துள்ளனர்.
அத்தோடு முன்னாள் ராணுவ அதிகாரி கண்ணன், நடிகரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் போன்றோருக்கு சொந்தமான சொத்துக்களையும் பிரித்துள்ளனர்.
இவ்வாறு மொத்தமாக 112 ஏக்கர் நிலங்களை அரசாங்க போலீஸ் பாதுகாப்புடன் சசிகலா தரப்பு அபகரித்துள்ளனர்'' என்று அறப்போர் இயக்கம் புகார் கொடுத்திருந்தது.
இந்த மனு குறித்து காஞ்சீபுரம் நில அபகரிப்பு பிரிவு போலீசார், அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராம் வெங்கடேசன் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி கண்ணன் ஆகியோரை நேரில் வந்து விளக்கம் அளிக்க கேட்டுள்ளார்கள்.
இதையடுத்து அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராம் வெங்கடேசன் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி கண்ணன் ஆகியோர் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் விளக்கம் கொடுத்துள்ளனர்.
சசிகலா தரப்பின் மேலும் பல கொள்ளைகளும், அபகரிப்புகளும் எதிர்வரும் நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment