ஏப்ரல் 12-ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மர்மமான முறையில் கடந்த வருடம் டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்ததையடுத்து அவர் சட்டப்பேரவை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இடம்பெறவுள்ள இடைத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
அதிமுக வின் பன்னீர்செல்வம் தரப்பு சசிகலா தரப்பு இரண்டுமே எப்படியாவது இந்த இடைத்தேர்தலில் வென்று காட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். திமுக வுக்கு இது பெரிய பிரச்சனையாக இல்லை.
அதேவேளை தீபா ஆரம்பம் முதலே நான் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன், சசிகலா குழுவை விரட்டியடிப்பேன் என்று
சபதமிட்டு செயலாற்றி வருகிறார்.
2,62,721 வாக்காளர்களைக்கொண்ட இந்த தொகுதியில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
0 comments:
Post a Comment