ஈராக் நாட்டிலன் கஜாஜ் எனும் கிராமத்தில் இடம்பெற்ற இரண்டு தற்கொலை குண்டு தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்கள் மீது இந்த தாக்குதல்களை இரு தற்கொலை குண்டுத்தாரிகள் நடத்தியுள்ளனர். இறந்தவர்களில் அதிகமானோர் சிறுவர்களும் குழந்தைகளும் என பிரதேச அரசு அலுவலகர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை தமது உறுப்பினர்களே மேற்கொண்டதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
தமக்கு எதிரான ஷியா ஆயுததாரிகளை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment