ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையர் அல் ஹுசைனின் அறிக்கையை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜெனிவாவில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றவே நாங்கள் ஒப்புக்கொண்டோம். அதை நிறைவேற்றுவதே எமது நோக்கம். ஆனால் தற்போது புதிதாக வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையர் அல் ஹுசைனின் அறிக்கை எம்மை கட்டுப்படுத்தாது என்று இலங்கை வெளிவிகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை இதனை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டிருந்தது. போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரின் பங்களிப்புடன், நம்பகமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. .
ஆனால் ஜெனிவாவில் சர்வதேசத்திற்கு முன்னர் ஏற்றுக்கொண்ட இலங்கை அவ்வாறு நடக்கவில்லை. மாறாக வெளிநாட்டு நீதிபதிகளை போர் குற்றச்சாட்டு விசாரணையில் இணைக்க இலங்கை சட்டத்தில் இடமேயில்லை என்று இலங்கை அதிபர் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார்.
தமக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா, நியூசிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், கனடா,தென்கொரியா, அயர்லாந்து, சுவீடன், பங்களாதேஷ், பாகிஸ்தான், டென்மார்க், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் உள்ளதாக இலங்கை வெளிவிகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்ட நாடுகளில் முக்கால்வாசி நாடுகள் முந்தைய மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு எதிராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment