இலங்கை

இலங்கையில் 1246 பேர் கைது




இலங்கையில் திடீர் என்று முழு நாட்டிலும் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மிகுந்த ரகசியமாக குறிப்பாக ஊடகங்களுக்கு இந்த நடவடிக்கை குறித்து தகவல் கசியாமல் காவல் துறையினர் செயல்பட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் முழு நாட்டிலும் பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் தேடப்படும் குற்றவாளிகள் உட்பட 1246 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த தேடுதல் நடவடிக்கையில் 11,795 பொலிசார் பங்குபற்றியுள்ளதாக்க குறிப்பிட்டுள்ள இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிக தகவல்கள் எதையும் கூறவில்லை.

இதேவேளை இலங்கையில் மீண்டும் கைதுகளும் கடத்தல்களும் இடம்பெற ஆரம்பித்துள்ளதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
முன்னாள் போராளிகள் பலர் கைது செய்யப்பட்டதாகவும் கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சுமந்திரனைக்கொல்ல முனைந்ததாகவும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இப்படியான சூழலில் இடம்பெற்ற இந்த தேடுதல் நடவடிக்கைக்கும் மேற்படி தமிழ் தரப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றும்  
இது முற்றிலும் குற்றவாளிகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




0 comments:

Post a Comment

Powered by Blogger.