ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நியாயமாக, நேர்மையாக செயல்பட வேண்டும். அதுதான் ஜனநாயகத்துக்கு உகந்தது.
திமுக உட்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. எனவே ஜனநாயகத்துக்கு பாதிப்பு வருவது போல செயல்படக்கூடாது. இவ்வாறு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று ஞாயிறு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது ''இப்போதுள்ள பினாமி ஆட்சிக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக உள்ள ஜார்ஜ் ஆதரவாக உள்ளார்.
கூவத்தூரில் 122 எம்.எல்.ஏ.கள் அடைக்கப்பட்டு இருந்தபோது அதற்கு ஜார்ஜ்தான் பாதுகாப்பும் ஒத்துழைப்பும் வழங்கியுள்ளார்.
சட்டமன்றத்தில் இருந்து எங்களை எல்லாம் தூக்கிக் கொண்டு வந்து வெளியில் போட்டதும் ஜார்ஜ் மற்றும் அவரது காவல்துறை அதிகாரிகள் தான்.
ஆகவே, ஜார்ஜ் கமிஷனராக இருந்தால், நிச்சயமாக இந்த தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை. எனவே அவரை உடனடியாக, முன்கூட்டியே மாற்ற வேண்டும் என்று எங்கள் அமைப்பு செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு நேற்றைக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருப்பவர்கள் இந்த பினாமி ஆட்சிக்கு வரப்போகும் இடைத்தேர்தலில் புத்தி புகட்டவேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment