ஐ.நா.சபையில் ஐ.நா.வின் அழைப்பின் பேரில் ஐஸ்வர்யா பரதநாட்டியம் ஆடியதாக சொன்னது முழு பொய் என்று தெரியவந்துள்ளது.
உண்மையில் அப்படி ஒரு நிகழ்ச்சி ஐ.நா.மன்றத்தில் நடக்கவில்லை. ஐ.நா.வும் ஐஸ்வர்யாவை நடனமாட அழைக்கவில்லை.
இந்தியாவிலிருந்து எம்.எஸ். சுப்புலட்சுமி, சுதா ரகுநாதன் போன்றவர்கள் முன்பு ஐ.நா.வால் அழைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன.
ஆனால் இம்முறை ஐஸ்வர்யா நடனமாடியது ஐ.நா.மன்றத்தில் அல்ல. மாறாக ஐ.நா. தலைமையகத்தில் உள்ள ஒரு பகுதியில் இந்திய அரசு அதிகாரிகள் நடத்திய ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியில்தான் ஐஸ்வர்யா ஆடியுள்ளார்.
இந்திய அரசு அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் யாரையாவது தெரிந்திருந்தால் யாரும் அந்த அறையில் நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
இந்த உண்மையை மறைத்து ஐ.நா.மன்றத்தில் ஆடுவதாக ஐஸ்வர்யா வெத்து விளம்பரம் தேடியுள்ளார்.
இவ்வளவு தில்லுமுல்லுகளை செய்து ஐஸ்வர்யா ஆடினாலும் அதைக்கூட அவர் சரியாக செய்யவில்லை.
அவரது ஆட்டத்தை பார்த்து ஆடத்தெரியாத ஐஸ்வர்யாவை ஐ.நா. மேடையை நாறடித்துவிட்டார் என்று பலரும் ஐஸ்வர்யா தனுஷை திட்ட ஆரம்பித்துள்ளனர்.
ஐஸ்வர்யாவுக்கு நடனமே தெரியவில்லை. அவர் பரதநாட்டியத்தை முறையாக ஆடவில்லை. ஆடத்தெரியாமல் ஆடி பாரத நாட்டியத்தை கேவலப்படுத்தி உள்ளார் என்று கண்டங்கள் எழுந்துள்ளன.
பரதநாட்டியத்தை ஆட தகுதியான கலைஞர்கள் எவ்வளவோ பேர் இருக்கையில் தகுதியே இல்லாத ஐஸ்வர்யா தந்தை நடிகர் ரஜினிகாந்தின் செல்வாக்கால் குறுக்கு வழியில் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார். இது மிகவும் கேவலமான செயல் என்று பலரும் விமர்சிக்கின்றனர்.
அரசியல், சினிமா செல்வாக்கு இல்லாததால எத்தனையோ திறமையான கலைஞர்கள் முன்னுக்கு வர முடியாமல் உள்ளனர் என்று பிரபல நடன கலைஞரான அனிதா ரத்தினம் கவலை வெளியிட்டிருந்தார்.
தகுதி இல்லாத தன் மகளுக்கு இப்படி குறுக்கு வழியில் வாய்ப்பை வாங்கி கொடுத்த ரஜினிகாந்த் மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
0 comments:
Post a Comment