உலகம்

மத்தியதரைக்கடலில் 250 பேர் பலி



ஐரோப்பாவை நோக்கி பயணித்த இரு படகுகள் கவிழ்ந்ததில் 250 அகதிகள் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் 25 வயதிற்குட்பட்ட ஆப்பிரிக்கர்களாக உள்ளனர்.
லிபியாவின் துறைமுகமான சப்ரடாவுக்கு நேராக 30 கி.மீ. தொலைவிலுள்ள கடலில் நேற்று இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேடுதல் தொடர்வதாக இத்தாலி தெரிவித்துள்ளது.

ஈராக், லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இடம்பெறும் உள்நாட்டு போர் காரணமாக மக்கள் அகதிகளாக படகுகளில் ஐரோப்பாவுக்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
இவ்வாறு பயணிக்கும் போது கடல் சீற்றத்தாலும், அதிகளவிலான பயணிகள் கொண்டதாலும் படகுகள் கடலில் மூழ்குகின்றன. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகின்றனர்.

இதற்கு சில நாட்களுக்கு முன்னர் மத்திய தரைக்கடல் பகுதியில் தத்தளித்த சுமார் 6000 பேர் கடந்த சிலநாட்களுக்குள்  காப்பாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச குடியேற்ற அமைப்பு ( ஐ.ஓ.எம்) தெரிவித்துள்ளது.

லிபியாவிலிருந்து இத்தாலி நோக்கி செல்லும் கடல் பாதையிலேயே இவர்கள் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த வருடத்தில் இவ்வாறு பயணித்தவர்களில் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளால் தூண்டிவிடப்பட்டு வட ஆப்பிரிக்காவில் ஆரம்பித்த அரபு வசந்த கிளர்ச்சியானது அந்த பிரதேத்தில் பெரும் அழிவை உண்டாக்கியது. லிபியா முதல் எகிப்து வரை பெரும் கலவரங்கள் ஏற்பட்டன.

செல்வ செழிப்போடு இருந்த அந்த நாடுகள் இன்று சீரழிந்து வறுமையிலும் உள்நாட்டு போரிலும் சிக்கி தவிக்கின்றன. இஸ்லாமிய மத பயங்கரவாதிகள் உலகம் காணாத கொடுமைகளை அரங்கேற்றி வருகிறார்கள். இந்த கொடுமைகளில் இருந்து உயிர் காக்க இலட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பா நோக்கி அகதிகளாக இடம்பெயர்ந்து வருகிறார்கள்.
இப்படி தப்பி செல்லும் மக்களில் பலர் லிபியாவின் கரையோரத்திலிருந்து இத்தாலி நோக்கி பயணிக்கிறார்கள்.

அதேபோல வளமான எதிர்காலத்திற்காக மாலி, நைஜிரியா, எரித்திரியா, சோமாலியா போன்ற  நாடுகளை சேர்ந்தவர்களும் பொருளாதார அகதிகளாக, இத்தாலி நோக்கி கடல் பயணத்தை செய்கிறார்கள். மத்திய தரைக்கடலில் மூழ்கி இறப்பவர்களில் அதிகமானோர் இவர்களாகவே உள்ளனர்.

ஆப்பிரிக்காவின் வறுமையான நாடுகளை சேர்ந்தவர்கள் முன்னர் லிபியா போன்ற வளமான நாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றார்கள். ஆனால் இப்போது லிபியா போன்ற நாடுகளில் உள்நாட்டு போர் நடக்கிறது. எனவே அந்த நாட்டு மக்களே அகதிகளாக இடம்பெயர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வறுமையான ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பாவை நோக்கி இடம்பெயர்வது அதிகரித்துள்ளது.

1 comments:


  1. all the time i used to read smaller articles that also clear their motive, and that is also happening with this paragraph which I am reading now. craigslist san diego

    ReplyDelete

Powered by Blogger.