அரசியல்

தமிழர்களை கடத்தியதாக கடற்படை அதிகாரி மீது வழக்கு



கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து 2009ஆம் ஆண்டு இரு தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டனர்.
இந்த கடத்தல் வழக்கில் லெப்தினன் கமாண்டர் தம்மிக்க அணில், லெப்தினன் கமாண்டர் சம்பத் தயானந்தகே, சிரேஸ்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள லெப்தினன் கமாண்டர் தம்மிக்க அணில் பாமாவை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று வியாழன் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. நீதவான் ஜெயராம் டிரொக்ஸி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதேவேளை முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவிடமும் லெப்தினன் கமாண்டர் சம்பத் தயானந்தகேவிடமும்  வாக்குமூலம் பதிவுசெய்யவிருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரியப்படுத்தினர்.

இலங்கையின் முன்னாள் சிரேஸ்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க இவ்வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கை குலைக்கும் நோக்குடன் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

Powered by Blogger.