மீத்தேனின் மறுபிறப்பான ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. விவசாயிகள் , பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், திரை பிரபலங்கள் என பலரும் இந்த திட்டத்திற்கு எதிராக தமது எதிர்ப்பை காட்டி வருவதுடன் தமிழகம் முழுவதும் இருந்து பலரும் நெடுவாசலுக்கு நேரிடையாக சென்று போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு செல்பவர்களை போலீசார் தடுத்தும் அச்சுறுத்தியும் வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்கள், மீனாட்சி புரம் அருகே நெடுஞ்சாலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். டி.எஸ்.பி பாலகுரு தலைமையில் மூன்று வேன்களில் வந்த 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுத்து நிறுத்துப்பட்டனர்.
திருச்சியில் இருந்து நெடுவாசலுக்குப் புறப்பட்ட தண்ணீர் அமைப்பினர்கள் 15 பேரை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இந்த மக்கள் விரோத சுற்று சூழலுக்கு எதிரான திட்டத்திற்கு பிப்ரவரி 15-ம் தேதி மத்திய அரசு ஒப்புதலை வழங்கியுள்ளது. அந்த அனுமதியினை வெளியிட்ட நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ''ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்குகிறது. இந்தியாவில் மொத்தம் 31 இடங்களில் 'ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கப்படும்" என்று அறிவித்தார்.
அவர் குறிப்பிட்ட 31 இடங்களில் 17 இடங்களில் தனியார் நிறுவனங்கள் இயற்கை எரிவாயுவை எடுக்கவுள்ளன. ஒரு தனியார் நிறுவனம் மட்டும் 14 இடங்களில் எரிவாயுவை எடுக்கவுள்ளது. தனியார் நிறுவனங்களால் லாபம் முழுவதும் எடுத்துக்கொள்ளப்பட்டு அரசுக்கு மிக சிறிய தொகை கமிஷனாக கொடுக்கப்படவுள்ளது.
தமிழ் நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம்., நெடுவாசல் கிராமத்தில் இந்த எரிவாயு எடுக்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட எல்லைப்பகுதியில் டெல்டா பகுதி அருகே நெடுவாசல் அமைந்துள்ளது.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் எரிவாயு எடுப்பதற்கான ஆரம்ப வேலைகள் 2009 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. நெடுவயல் அருகிலுள்ள கருங்காகுறிச்சி கிராமத்தில் இரண்டு விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. பின்னர் அங்கு ஆழ்துளைக்கிணறு தோண்டும் பணியினை ஆரம்பித்தது. அங்கிருந்த நிலத்தடிநீரை வெளியேற்றிய பின்னர் எரிபொருள் எண்ணெயும், வாயுவும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
0 comments:
Post a Comment