தனது இளமையையும் உயிரையும் பணயம் வைத்து 16 வருடங்கள் தான் சார்ந்த மக்களது உரிமைக்காக போராட்டத்தை இரோம் ஷர்மிளா நடத்திஇருந்தார். மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 16 ஆண்டுகளாக அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
ஆனால் தேர்தலில் போட்டியிட்ட ஷர்மிளாவுக்கு அவரது மக்கள் வெறும் 90 வாக்குகளை மட்டுமே வழங்கி படு தோல்வியடைய வைத்துள்ளமை குறித்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் கவலை வெளியிட்டு வருகிறார்கள்.
தேர்தலில் ஷர்மிளாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளைவிட யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று 143 வாக்குகள் NOTA வுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பெரும் கட்சிகள் தமது கட்சியின் சின்னத்தில் போட்டியிடுமாறு கோரியும் நேர்மைக்காக தனித்து ஷர்மிளா போட்டியிட்டிருந்தார்.
ஆனால் தங்களுக்காக பேசிய ஒரு மனித உரிமை போராளிக்கு அந்த மக்கள் இவ்வளவு கேவலமான முடிவை கொடுத்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த ஷர்மிளா அரசியலை விட்டே போவதாக கூறிவிட்டார்.
இப்படி மக்களுக்காக போராடுபவர்கள் மக்களுக்காக செயல்படுபவர்களை, மக்கள் தேர்தலில் தோற்கடித்து விடுகிறார்கள்.
கொலைகாரர்கள் கொள்ளைக்காரர்கள் குற்றவாளிகளை பதவியில் அமர்த்துகிறார்கள். பின்னர் அவர்கள் ஊழல் செய்கிறார்கள் என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.
தேர்தலில் நேர்மையானவர்களை தேர்ந்தெடுக்காமல் தவறானவர்களை தேர்ந்தெடுப்பதும் பின்னர் குற்றம் சாட்டுவதும் எவ்விதத்தில் நியாயமாக இருக்க முடியும் என்று பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
தமிழகத்திலும் வாக்கினை காசுக்கு விற்ற பின்னர் ஆட்சியாளர்கள் பற்றி குறை கூறும் உரிமை மக்களுக்கு இருக்கிறதா என்ற கேள்விகள் எழுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment