இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலத்தில் வாழ அனுமதிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாபுலவை சேர்ந்த இருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த இருவரும் இராணுவ முகாமிற்கு முன்பாக தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஏற்கனவே ஒரு மாத காலம் இடம்பெற்ற போராட்டத்தை அரசாங்கத்தின் போலி வாக்குறுதியை நம்பி மக்கள் கைவிட்டனர். எனினும் 84 குடும்பங்களின் 42 ஏக்கர் காணிகள் மட்டுமே விடுவிக்கப்பட்டன என்பதை அறிந்த மக்கள் கடந்த முதலாம் திகதி முதல் வற்றாப்பளை கேப்பாப்புலவு வீதியில் மீண்டும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். விடுவிக்கப்படாத 486 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறு கோரி 145 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கு ஆதரவாக ஏனையவர்களும் போராட்டத்தில் பங்கெடுத்து வருகிறார்கள்.
0 comments:
Post a Comment