மீன் பிடிக்கையில் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினரும் மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீமான், வைகோ, திருநாவுக்கரசர், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் போன்றோர் பிரிட்ஜோவின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளனர். பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் தவிர மற்ற அனைத்து தமிழக கட்சிகளும் அரசியல்வாதிகளும் இப்படுகொலை குறித்து கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பாஜக நழுவல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.
தமிழக அரசின் நிவாரணத் தொகையையும் மறுத்துவிட்டு நிரந்தர நிவாரணம் கோரி மீனவர்கள் மூன்றாவது நாளாக போராடி வருகின்றனர். பலரும் தங்கச்சிமட போராட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதேவேளை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின்போது பிரிட்ஜோவின் உடலில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது. இந்த கொலையை செய்தது இலங்கை கடல் படைதான் என்று தமிழக மீனவர்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் கூறி வருகின்றனர். ஆனால் இலங்கை அரசாங்கம் இக்கொலையை தாம் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளதுடன் விசாரணை நடைபெறுவதாக கூறியுள்ளது.
0 comments:
Post a Comment