வித்தியா படுகொலை வழக்கு நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கின் சந்தேகநபர்கள் 12 பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களிடம் மேலதிக விசாரணைகளை செய்யவேண்டியுள்ளதாக விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாள்தோறும் காலை 09.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதையடுத்து சந்தேகநபர்களிடம் நீதிமன்றுக்கு ஏதேனும் தெரிவிக்க விரும்புகின்றீர்களா என நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் வினவினார். இதன் போது 12ஆவது சந்தேகநபர் “என்ன குற்றத்திற்காக கைது செய்யப்பட்டேன், என்ன குற்றம் செய்தேன், எந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன் என தனக்கு தெரியாது” என தெரிவித்தார்.
இதற்கு நீதிபதி, “இலங்கை சட்டத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் என்ன என்பது தொடர்பில் கேட்டு அறிந்திருக்க வேண்டும்” என பதிலளித்தார்.
ஆனால் 12ஆவது சந்தேகநபர் “குற்றம் என்னவென்று தெரியாத காரணத்தினாலேயே கேட்கின்றேன்” என சத்தமிட்டார்.
இதையடுத்து நீதிபதி தனது கூற்றுக்கு மதிப்பளிக்கவில்லை என தெரிவித்து 12ஆவது சந்தேகநபர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment