அமெரிக்க கடற்படையையும் ஏனைய பிரிவுகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களின் நிர்வாணப்படங்கள் இரகசிய முகநூல் பக்கமொன்றில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் தற்போது அமெரிக்க பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தெரியாமல் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்ட கமெராக்கள் மூலமே படப்பிடிக்கப்பட்டுள்ளது.
அப்படங்கள் யுனைடட் மரின் எனும் 30 000 பின் தொடருவோரைக்கொண்ட முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த புகைப்படங்களை பகிர்ந்த குற்றத்துக்காக கடல்படைக்கான ஒப்பந்தக்காரர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவ்வாறு படங்களை பகிர்ந்த கடல் படையினர் கடல் படை சட்டதிட்டங்களை மீறியவர்களாக கருதப்பட்டு அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படவுள்ளது.
தற்போது இந்த படங்களை முகநூல் நிர்வாகம் அகற்றியுள்ளது.
0 comments:
Post a Comment