கொசிப்

ஒரு கோடி போராளி லாரன்ஸின் படத்திற்கு சிக்கல்


ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒரு கோடி கொடுப்பதாக கூறி போராட்டத்தில் இணைந்து பின்னர் போராட்டத்தை வேறு திசைக்கு திருப்பிய நாடிகர் லாரன்ஸின் மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழில் வாய்ப்பில்லாது தெலுங்குக்கு போன நடிகர் லாரன்சுக்கு அங்கும் வாய்ப்புகள் இல்லாமல் போனது.
இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'காஞ்சனா' படம் வெளியானது. பேய் படங்கள் உச்சத்தில் இருந்த சமயத்தில் வெளியான இப்படம் நன்றாக கல்லா காட்டியது.

அந்தப்படத்தின் வெற்றிக்கு பிறகு, நாகா, மொட்ட சிவா கெட்ட சிவா, ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா என பல படங்களுக்கு பூஜை போட்டார் ராகவா லாரன்ஸ். இவற்றில் மொட்ட சிவா கெட்ட சிவா படம் தவிர மற்ற படங்கள் எல்லாமே கைவிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 'மொட்ட சிவா கெட்ட சிவா' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவித்தனர்.
ஆனால் 'மொட்ட சிவா கெட்ட சிவா' சொன்ன திகதியில் வெளியாகவில்லை.
பண விவகாரம் வில்லங்கமாக உருவெடுத்திருப்பதே இருப்பதே இதற்கு காரணம்.


இந்த பஞ்சாயத்து முடிந்து படம் வெளியாக முன்னர் லாரன்ஸ் நெடுவாசல் போராட்டத்தில் ஒரு கோடி கொடுத்து சேர்ந்துவிட கூடாது என்று கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.