அரசியல்

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கொள்ளை மூடிமறைக்கப்பட்டதா?



யாழ்ப்பாணத்திற்கு மின்சாரத்தை வழங்க அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ  எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான நோதேர்ன்பவர் நிறுவனத்திற்கு 2010ஆம் ஆண்டு சுன்னாகம் பகுதியில் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நோர்தன் பவர் மின் உற்பத்தி நிலையத்தினால் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் காரணமாக 2012ஆம் ஆண்டு சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள குடிநீர் கிணறுகள் பாதிக்கப்பட்டன.  

இதன் காரணமாக அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குடிநீருக்கு பெரும் சிரமத்தை தற்போதும் எதிர்கொண்டுவருவதோடு, இந்த கழிவு கலந்த குடிநீரைப் பருகுவதனால் உயிராபத்துக்களும், பக்கவிளைவுகளும் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது.

இதையடுத்து நோர்தன் பவர் நிறுவனத்தின் செயற்பாட்டிற்கு எதிராக சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையம் சார்பாக பேராசிரியர் ரவீந்திர காரியவசம் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணையில் நோதேர்ன்பவர் மற்றும் அதன் தாய் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் பெரும் பணத்தொகை பரிமாறப்பட்டுள்ளதாக மல்லாகம் நீதிமன்றம் துணிகரமான தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது.

இந்த நிறுவனத்திடம் பணம் வாங்கிக்கொண்டு சூழல் மாசை மறைத்ததாக வட மாகாண சபை முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரனும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும் போலி நிபுணர் குழு ஒன்றை அமைத்து சுன்னாகம் நீரில் மலக் கழிவுகளே கலந்துள்ளது எனவும் கிறீஸ் மற்றும் டீசல் கலந்திருக்கவில்லை எனவும் முடிவிற்கு வந்தமையை பலரும் கண்டித்தனர்.

நோர்தன் பவர் நிறுவனத்தை சேர்ந்த நிமலன் கார்த்திகேயன் என்ற அவுஸ்திரேலிய குடியேற்றவாசியே 
முதலமைச்சர் விக்னேஸ்வரனினையும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனையும் இவ்வாறு செயல்பட வைத்ததாக செய்திகள் வெளியாயின

முதலமைச்சர் விக்னேஸ்வரன் நோர்தன் பவர் நிறுவனத்தை பாதுகாக்க பெரும் பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில் அவர் இது தொடர்பில் நழுவல் போக்கில் இருப்பது குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்தி வருகிறது.


இதேவேளை இந்த ஊழலை மறைத்துவிடுவதற்கான திரைமறைவு வேலைகள் கொழும்பில் இடம்பெறுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

0 comments:

Post a Comment

Powered by Blogger.