அரசியல்

அழிகிறதா அதிமுக?



.பன்னீர்செல்வத்தின் கிளர்ச்சி, சசிகலாவின் சிறைத்தண்டனை, மக்களின் எதிர்ப்பு என பலமுனை தாக்குதல்களால் .தி.மு. நிலைகுலைந்து போயுள்ளது. இந்த சிக்கல்களுக்கு இடையே புதிதாக தீபக்கும் போயஸ் தோட்டம் எனக்கும் தீபாவுக்குமே சொந்தம், தினகரனை துணை பொது செயலாளராக ஏற்க முடியாது, ஜெயா அத்தையின் மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்று தீபக் புது புது குண்டுகளை போடத்தொடங்கியுள்ளார்

தீபா புது கட்சியை தொடங்கவுள்ளார். தனது வீட்டில் புதிய கட்சி அலுவலகத்தை திறந்துள்ளார். எனக்கு ஜெயா அத்தையின் சொத்துக்கள் தேவையில்லை, அவரது கட்சியை காப்பேன், தொண்டர்களை காப்பேன், மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்கிறார்.

பன்னீர்செல்வம் தரப்புக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. தேர்தல் வந்தால் பன்னீர் தரப்பே வெற்றி பெறுவார்கள் என்பதை யாரும் அறிவார்கள். அதேவேளை சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள் சொந்த ஊருக்கே செல்ல முடியாமல் இருக்கிறார்கள். போகும் இடமெல்லாம் மக்கள் எதிர்ப்பு இருக்கிறது.  

ஸ்டாலின் முதல் கமல் வரை பலரும் தேர்தல் வரவேண்டும் என்று கோருகிறார்கள். ஆனால் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் சசிகலா தரப்பு இல்லை. இருக்கும் 4 வருடங்களுக்குள் சுருட்டுவதை சுருட்டிவிட்டு ஓடிவிட வேண்டும் என்பதே சசிகலா தரப்பின் நோக்கமாக இருக்கிறது.

தீபாவை போயஸ் தோட்டத்திற்கு அனுமதிக்காமல் ஜெயாவை பார்க்கவிடாமல் சசிகலா செய்த சதி பெரும் எதிர்ப்பை சசிகலாவுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை இது வலுப்படுத்தியிருக்கிறது
அவசர அவசரமாக சசிகலா பொது செயலாளர் பதவியை கைப்பற்றியது, பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவியிலிருந்து அச்சுறுத்தி ராஜினாமா செய்ய வைத்தது, முதலமைச்சராக பதவியை பிடிக்க அவசரப்பட்டது, ஊழல் வழக்கில் சிறைக்கு போனது, பன்னீர்செல்வத்தை நீக்கி பினாமியான எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கியது , சசிகலா நடராஜன் குடும்ப சண்டைகள் என எல்லாமே சசிகலாவுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது

ஜெயலலிதாவின் மரணத்தில் சதி இருப்பதாகவே இன்றுவரை பொதுமக்கள் நம்புகிறார்கள். அப்பலோ முதல் லண்டன் டாக்டர் வரை பலரும் விளக்கம் கொடுத்து பார்த்துவிட்டார்கள். ஆனால் அவை எல்லாம் மேலும் மேலும் குழப்பத்தையே கொடுத்திருக்கின்றன. ஒன்றை மறைக்க இன்னொன்றை கூறுவதாகவே தோன்றுகிறது. என்றாவது ஒரு நாள் இது ஒரு பெரும் பிரச்சனையாக மாறவே வாய்ப்பு இருக்கிறது.


சசிகலா, பன்னீர் செல்வம், தீபா, தீபக், நடராஜன், தொண்டர்கள் என சிதறு தேங்காய் போல அதிமுக சிதறிக்கிடப்பது அழிவின் ஆரம்பமாக இருக்கலாம்

0 comments:

Post a Comment

Powered by Blogger.