அரசியல்

நான் இருந்திருந்தால் பிரபாகரனை தொட்டிருக்க முடியாது- கருணா



நான் புலிகளோடு இருந்த காலத்தில் இலங்கை இராணுவத்தால் புலிகளை தோற்கடிக்கமுடியவில்லை.
இப்போது யுத்த வெற்றிக்கு பலரும் உரிமை கோருகிறார்கள். முன்னாள் இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேக்கா புலிகளை தோற்கடித்ததாக கூறுகிறார். ஆனால் நான் புலிகளோடு இருந்த காலத்தில் அவரால் புலிகளை தோற்கடிக்க முடியவில்லை. புலிகளுக்கு எதிராக வெற்றிகரமான தாக்குதல்களை அவர் நடத்தவில்லை. ஆனால் புலிகள் நடத்தினார்கள்.

இந்திய படை பிரபாகரனை முல்லைத்தீவு காட்டில் சுற்றி வளைத்திருந்த காலத்தில் அவரை பாதுகாத்தவன் நான். அதே போல பல முறை பிரபாகரனை பாதுகாத்திருக்கிறேன்.
ஆனால் நான் வெளியேறிய பின்னர் புலிகள் இயக்கம் ஆட்டம் காண தொடங்கியது

சிங்கள பொதுமக்கள் படுகொலைகளில் எனக்கு சம்பந்தம் இல்லை. குமரப்பா, பொட்டு அம்மான் போன்றவர்கள் இதற்காக பிரபாகரனால் முன்னர் தண்டிக்கப்பட்டார்கள். பின்னர் பிரபாகரனும் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்.  பாலசிங்கம், தமிழ்ச் செல்வன், சூசை போன்றவர்கள் இதை விரும்பவில்லை.

பிரபாகரன் மிகவும் ஒழுக்கமானவர். ஆங்கில போர் திரைப்படங்களைப் பார்ப்பதே அவருடைய பொழுது போக்கு.   நான் அவருக்கு தமிழில் மொழிபெயர்த்துக் கூறுவேன். இரகசியங்களை வெளியிடுபவரைக் கண்டால் அவருக்கு பிடிக்காது கொன்று விடுவார்.

தொடர் வெற்றிகள் அவருக்கு தலைக்கனம் அதிகமாகி விட்டது. அதுவே அவரது தோல்விக்கு வழி வகுத்தது
அவருக்கு மத நம்பிக்கையில்லை கடவுள் நம்பிக்கையும் இல்லை.
நான் புலிகளை விட்டு வெளியேறாமல் இருந்திருந்தால் பிரபாகரனை இலங்கை இராணுவம் தொட்டிருக்க முடியாது.

இவ்வாறு கருணா சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.