அதிமுக பிளவின் பின்னர் ஓபிஎஸ் அணியில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ் இணைந்து கொண்டார்.
முதல்வராக ஓபிஎஸ் இற்கே அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்ட நிலையில் அவரால் தனது பக்கம் எம்எல்ஏக்களை திருப்ப முடியாமல் போனது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலாவின் ஆதரவு பழனிசாமி முதல்வரானார். ஓபிஎஸ் அணியினருக்கு எதுவும் கிடைக்கவில்லை.
தற்போது ஓபிஎஸ் அணியை சேர்ந்த சிலர் மீண்டும் சசிகலா பக்கம் தாவ உள்ளதாக கிசு கிசுக்கப்படுகிறது. இந்த நிலையில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சசிகலா பக்கம் தாவியதாக செய்தி எழுந்தது. எனினும் இந்த செய்தியை எம்.எல்.ஏ. நடராஜ் மறுத்துள்ளார்.
''சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட விழாவில் நான் கலந்து கொண்டேன். இதனால் அணி மாறியதாக வதந்தி வெளியாகியுள்ளது.
அரசு விழாக்களில் கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கலந்துகொண்டேன். தமிழக மக்களுக்கு திட்டங்களை அர்பணிக்கும் விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
மயிலாப்பூர் தொகுதி சார்ந்த திட்டங்களும் தொடங்கப்பட்டதால் முதல்வர் பங்கேற்ற விழாவில் பங்கேற்றேன்'' என்று அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment