ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து இன்று செய்வாயன்று மொசூல் நகரிலுள்ள அரச கட்டிடங்களை மீட்டுள்ளனர்.
மக்கள் இந்த தாக்குதல் நடவடிக்கைகள் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக வெளியேறி வருகிறார்கள். எனினும் ஏராளமான மக்கள் இன்னும் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர்.
சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் பெரும்பான்மை பிரதேசங்களை கைப்பற்றி உலகமே அதிரும் அளவுக்கு மிக கொடுமைகளை செய்த ஐஸ் பயங்கரவாதிகள் 2014 இல் ஈராக் நாட்டின் மொசூல் நகரத்தை கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய அரசாக அறிவித்துக்கொண்டனர். இப்படியே போனால் ஐரோப்பாவையே கைப்பற்றி விடுவார்களோ என்று அஞ்சும் அளவுக்கு படு பயங்கரமாக முன்னேறி வந்தனர். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் உள்ள சிலர் கூட ஐ.எஸ். பெயர் எழுதிய ஆடைகளை அணிந்து பெருமைப்பட்டுக்கொண்டனர். அந்த அளவுக்கு ஐ.எஸ். உலகை ஆள போகிறது என்று பலரும் நம்பினர்.
அமெரிக்கா பயங்கரவாதிகளை தாக்குவதாக கூறிக்கொண்டு தனது நலனில் குறியாக இருந்தது. மறுபுறம் துருக்கி ஜனாதிபதி பயங்கரவாதிகளிடம் இருந்து எண்ணெய் வாங்கி விற்று பெரும் ஊழல் பணத்தை சேர்த்தார். அமெரிக்கா துருக்கி போலவே வேறு சில நாடுகளும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை பாவித்து நன்மையடைந்தனர்.
ஆனால் ஐஸ் பயங்கரவாதிகளுக்கு ரஷ்யா எமனாக வந்தது. ரஷ்யாவின் நிலைப்பாடு வேறாக இருந்தது. அதற்கு காரணம் சிரியா ரஷ்யாவின் நீண்டகால நட்பு நாடு. ரஷ்யாவுக்கு வெளியே அவர்களுக்கு ரஷ்யாவுக்கு இருந்த ஒரே கடற்படைத்தளம் சிரியாவில்தான் இருந்தது.
எனவே தனது நட்பு நாட்டை பாதுகாக்கவும் தனது இராணுவ நலனை காக்கவும் ரஷ்யா யாரும் எதிர்பாராத அதிரடியில் இறங்கியது.
2015 ம் ஆண்டு செப்டம்பர் 30ம் திகதி ரஷ்ய விமான படை சிரியாவில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீச்சு தாக்குதலை ஆரம்பித்தது. ரஷ்யாவின் அதிரடியில் நிலை குலைந்து போன பயங்கரவாதிகள் மீது சிரிய இராணுவம் தரை வழி தாக்குதலை நடத்தியது. சிரிய ராணுவத்திற்கு ஈரானும், ஹிஸ்புல்லா போராளிகளும் ஆதரவு வழங்கினார். தோல்வியுற்று சோர்ந்து கிடந்த சிரிய படைகளுக்கு ரஸ்யாவின் ஆதரவு பெரும் வலிமையை கொடுத்தது. அவர்கள் வீறு கொண்டு எழுந்து தோற்கடிக்க முடியாதவர்கள் என்று நம்பப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளை திருப்பி அடிக்க தொடங்கினர்.
ஐ.எஸ். எனும் விம்பம் கலையத் தொடங்கியது. சிரியாவை தொடர்ந்து ஈராக்கிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோல்வி காண ஆரம்பித்தனர்.
மிக பெரிய நில பரப்பளவை தமது கட்டுப்பாட்டில் வைத்து எண்ணெய் வியாபாரம் செய்து ராஜாங்கம் நடத்திய ஐ.எஸ். இன்று தமக்கென ஒரு நகரம் கூட இல்லாமல் சிதறிப்போயுள்ளனர். ஆங்காங்கே மக்களை கேடயமாக வைத்துக்கொண்டு கெரில்லா தாக்குதல்களையும், சிறுவர் சிறுமிகளை பாவித்து தற்கொலை குண்டு தாக்குதல்களையும் நடத்தி வருகிறார்கள். ஆனால் இன்னும் எவ்வளவு காலத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளால் மறைந்திருக்க முடியும் என்பது கேள்விக்குறியே.
0 comments:
Post a Comment