துருக்கி ஜனாதிபதி எர்டோகனை பதவியிலிருந்து அகற்றுமுகமாக 2016 இல் இடம்பெற்ற ராணுவ கிளர்ச்சி தோல்வியடைந்தது. அதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் துருக்கி அதிபர் எர்டோகனால் வேட்டையாடப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் அதிபர் எர்டோகனால் தொடர்ந்தும் பலர் தேடப்பட்டும் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள்.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டுக்கான துருக்கி தூதரகத்தின் இணை தூதர் சுவிஸ் நாட்டில் தஞ்சம் கோரியுள்ளார். இது தொடர்பில் சுவிஸ் நாட்டின் டாகஸ் அன்சைகர் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
தஞ்சம் கோரியுள்ளோரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட முடியாது என சுவிஸ் நாட்டின் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment