விஷால் தனது நடிப்பை மட்டும் பார்த்துக்கொண்டு ஒழுங்காக இருக்க வேண்டும். தேவை இல்லாமல் தயாரிப்பாளர் சங்கத்தில் தலையிட கூடாது. தயாரிப்பாளர் சங்கத்தை இழிவுபடுத்தி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர் தாணு நடிகர் விஹசாளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஷால் தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சித்ததை கண்டித்து தயாரிப்பாளர்கள் நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் போதே தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விஷாலை கடுமையாக குற்றம் சாட்டினார்.
அவர் தனது தகுதிக்கும் வயதுக்கும் உரிய வேலைகளை செய்ய வேண்டும். பல முறை திரைப்படங்களில் நடிப்பதாக திகதியை ஒதுக்கி கொடுத்துவிட்டு ஏமாற்றியுள்ளார். தயாரிப்பாளாரர்களுக்கு நட்டம் ஏற்படுத்தி இருக்கிறார். தொடர்ந்து தோல்விப்படங்களை கொடுத்து தயாரிப்பாளர்களை நட்டப்படுத்திவரும் விஷால் முதலில் தனது வேலையை ஒழுங்காக செய்யட்டும்.
இப்படி தயாரிப்பாளர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்திவிட்டு மக்களுக்கு உதவி செய்வதாக விளம்பரம் செய்கிறார்.
அவருக்கு அரசியல் ஆசை வந்துள்ளது. எனவேதான் இவ்வாறான விளம்பர வேலைகளை செய்கிறார்.
இதனை நடிகர் சங்க தலைவர் நாசர், கண்டிக்க வேண்டும். நாசர் பொறுப்பில் இருக்கும்போது, விஷால் எதற்கு ஏன் தேவையில்லாத விடயங்க்களில் தலையிட வேண்டும் என்றும் தாணு கேள்வி எழுப்பினார்.
விஷால் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தை பார்த்தாலே போதும். தேவையில்லாமல் தயாரிப்பாளர் சங்கத்தில் தலையிட கூடாது என்று மேலும் தாணு குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment