இலங்கையின் கிளிநொச்சி, பரவிபாஞ்சான் பகுதியில் இலங்கை இராணுவத்தால் 2008 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப் பட்டிருந்த பொது மக்களின் நிலங்களில் இருந்து இராணுவம் படிப்படியாக வெளியேறி வருகிறது.
தமது நிலங்களில் இருந்து வெளியேறுமாறு கோரி பொது மக்கள் போராட்டத்தை நடத்தியிருந்தனர். இந்த நிலையில் பொது மக்கள் தமது நிலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இராணுவம் தமது காவல் அரண்களை ஏனைய கட்டமைப்புகளையும் அகற்றியபடி வெளியேறுகிறது.
19 ஆண்டுகளின் பின்னர் பொது மக்கள் தமது வீடுகளுக்கு செல்ல கிடைத்த வாய்ப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
2008ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 19 வருடங்கள் கழித்து முதல் தடவையாக இன்று தங்களின் வீடுகளுக்குச் சென்று சுத்தம் செய்யும் பணியில் மக்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
அத்தோடு குறித்த பிரதேசங்களில் இருந்து படையினரும் படிப்படியாக வெளியேறிவருகின்றனர்.
அந்த பகுதிகளில் படையினரால் அமைக்கப்பட்ட வேலிகள் அகற்றப்படுகின்றன.
இராணுவத்தால் அடுத்த வாரம் அரச அதிபரிடம் இந்த பகுதி உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மற்றும் யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளை விடுவிக்க கோரி மக்கள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்ற போதும் இது வரை இராணுவம் அசைந்து கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment