சிரியாவின் பழம் பெருமைவாய்ந்த பல்மைரா நகரை அரச படைகள் மீள கைப்பற்றியுள்ளன. ரஷ்ய வான்படை மற்றும் ஈரான், ஹிஸ்புல்லா உதவிகளுடன் ஐஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிய சிரிய அரச படைகள் இந்த வெற்றியை அடைந்துள்ளன.
ஐஸ் பயங்கரவாதிகளின் பிடி இறுக்கி சிரியா தத்தளித்த சமயத்தில் ரஸ்யா காலத்தில் இறங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஷ்ய ஜனாதிபதி சிரியாவுக்கு படைகளை அனுப்பியதுடன் ஐ.எஸ்.இற்கு எதிராக கடுமையான விமான தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டார்.
சிரியா மீண்டெழுந்து. படிப்படியாக ஐ.எஸ். இன் பிடியிலிருந்து பிரதேசங்களை சிரிய படைகள் மீட்டெடுத்தன.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் இருந்து 210 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ரோமர் கால வரலாற்றுச் சிறப்புமிக்க பல்மிரா நகரை 2015-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றினர். பழம்பெருமை வாய்ந்த இந்நகரை மதத்தின் பெயரால் அழித்தனர். சிலைகளை குண்டு வைத்து தகர்த்தனர். வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்தனர். பயங்கரவாதிகள் உலகப்புகழ் பெட்ரா இந்த நகரை முற்றாக நாசப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில்தான் ரஷ்யாவின் பக்க பலத்தோடு பல்மைரா மீண்டும் தற்போது விடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment