அரசியல்

சம்பந்தனுக்கு கஜேந்திரகுமார் பகிரங்க சவால்


யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பந்தனுக்கு சவால் விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால், தங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.. சுமந்திரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறுவதும் மக்களிடம் செல்லுவதற்கு தனக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறுவதும் தவிர்க்கப்படவேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பேசினார். எமக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் சுமந்திரனும் சம்பந்தனுமே பொறுப்புக்கூற வேண்டும். தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே எழுக தமிழ் பேரணியில் மக்கள் ஒன்று திரண்டார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எழுக தமிழ் பேரணியைத் திசை திருப்புவதற்காக குறித்த பேரணியில் கலந்துகொண்ட அனைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே குற்றச்சாட்டை முன்வைத்தது. ஆனால் தமிழரசுக் கட்சி எழுக தமிழ் பேரணி இலங்கைக் தமிழரசுக் கட்சிக்கு எதிரானது என பிரசாரம் செய்தது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.