இந்தியா

மோடிக்கு போட்டியாக யோகி ஆதித்யநாத்



உத்தர பிரதேசத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத் அதிரடியாக தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறார்.
பதவியேற்ற சில நாட்களுக்குள்ளேயே மக்களை கவரும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

ஆதித்யநாத் பதவியேற்றவுடனேயே 'அடுத்த பிரதமர் யோகி ஆதித்யநாத்' என்று அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து கலக்கினார். இப்போது அதற்கு ஏற்றால் போல அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்த நடவடிக்கைகள் மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளன.

மாட்டு இறைச்சி கூடங்களை மூடும்படி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதுதான் அவரது முதல் உத்தரவு. உளவு நடவடிக்கைகளை அதிகரிக்கவும் காவல் துறை தேசவிரோத சக்திகளை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்ததாக பள்ளிகள், கல்லூரிகள் அருகே நின்று பெண்களை கேலி செய்து, தொந்தரவு தருவோரை பிடிக்க தனிப்படை ஒன்றையும் அமைத்துள்ளார். இந்த படை கல்லூரிகளுக்கு சென்று சோதனை நடத்தியதில் 2 நாட்களில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த தனிப்படை பெண்களிடமும், மக்களிடமும் வரவேற்பை பெற்றதுள்ளது

அடுத்ததாக அரசு அலுவலகங்களில் குட்கா, பான் மசாலாக்கள் பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தவும் அவர் தடை விதித்துள்ளார்

எடுத்த எடுப்பிலேயே மக்களிடம் தனது செல்வாக்கை அதிகரிக்கும் அதிரடி நடவடிக்கைகளில் ஆதித்யநாத் இறங்கியுள்ளார். நிச்சயம் அவர் அடுத்ததாக பிரதமர் பதவியை குறிவைத்தே நகர்ந்து வருகிறார் என அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள்.
இதுவரை வெளியில் யாரும் மோடிக்கு போட்டியாக இல்லை. ராகுல் காந்தி இந்த ஜென்மத்தில் மக்களின் அபிமானம் பெட்ரா தலைவராக ஆகப்போவதில்லை. ஆனால் மோடியின் வேட்டிக்குள்ளேயே ஆதித்யநாத் புகுந்திருக்கிறார். நிச்சயம் ஒரு கலக்கு கலக்காமல் விடமாட்டார்.

200 மில்லியன் மக்கள் தொகையுள்ள உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், 403 தொகுதிகளில் பாஜக 312 தொகுதிகளில் பெரும் வெற்றி பெற்றிருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் மோடி இந்த தெரிவை விரும்பி செய்யவில்லை என்றும் ஆதித்யநாத்தின் செல்வாக்கு கொடுத்த அழுத்தத்தால் வேறு வழியில்லாமல் முதல்வராக நியமிக்கப்பட்டார் என்றும் செய்திகள் கசிகின்றன.

யோகி ஆதித்யநாத் மீது கொலை முயற்சி, வன்முறையை தூண்டியமை, பயங்கர ஆயுதங்களுடன் நடமாடியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தமை என பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

ஆதித்யநாத் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிக கடுமையான பிரசாரங்களை செய்துள்ளார்
2005ல் தாய் மதத்துக்கு திரும்புதல் என்ற நடவடிக்கையை செயல்படுத்தி கிறிஸ்தவர்கள் பலரை இந்து மதத்தில் இணைத்தார்.
நடிகர் ஷாரூக்கானை லஷ்கர் தீவிரவாத குழு தலைவன் ஹபீஸ் சையதுவுடன் ஒப்பிட்டு பேசிஇருந்தார்
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கடுமையாக எதிர்த்து வாக்களித்திருந்தார். இப்படி பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரராக ஆதித்யநாத் இருக்கிறார்.

''காஷ்மீர் பிரச்சினைக்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு. நேருவுக்குப் பதிலாக சர்தார் படேல் பிரதமராகியிருந்தால் காஷ்மீர் பிரச்சினையே எழுந்திருக்காது. விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விடுதலையடைந்து இந்தியாவின் அங்கமாக மாறும்'' என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.

''நாட்டில் ராம ராஜ்ஜியம் ஏற்படும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்'' என தொடர்ந்தும் ஆதித்யநாத் கூறிவருகிறார்.

''யோகா எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். பசுவை பாரத மாதாவாக அறிவிக்க வேண்டும். இந்துத்துவத்தின் அடையாளமான பசுவை கொல்லக் கூடாது. நாடு முழுவதும் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிட்டு வந்த ஆதித்யநாத் .பி.யின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது மேலும் நிலைமையை சிக்கலாகும் என்றே பலரும் கருதுகிறார்கள்.

உத்தர பிரதேசத்தில் 20 வீதமான முஸ்லீம் வாக்காளர்கள் இருந்த போதும் பா... 312 ஆசனங்களை பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முஸ்லீம் வாக்குகள் பிரிந்தமை, பா...வுக்கு எதிரான பொது எதிர்க்கட்சி இல்லாமல் போனமை, தந்திரமாக சாதி வாக்குகளை பா... பெற்றமை போன்ற பல காரணங்கள் இந்த வெற்றிக்கு கூறப்படுகின்றன.

எவ்வாறெனினும் .பி.யில் வன்முறையில் ஈடுபட்ட குற்ற வழக்குகள் உள்ள ஒருவர் முதல்வராக தெரிவு செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கிடையில், அவர் பிரதமர் பதவியை நோக்கி பயணிக்கும் செய்தி அடுத்த அதிர்ச்சியாக வந்துள்ளது.


0 comments:

Post a Comment

Powered by Blogger.