''எனது கணவர் ஒரு தங்கமான மனிதர். அப்படி ஒருவரை இந்த உலகில் பார்க்க முடியாது. அவர் ஒரு மாணிக்கம்.
ராமனை போன்றவர். அவரிடம் எந்த தவறும் இல்லை. ஆனாலும் நான் அவரை விவாகரத்து செய்ய போகிறேன்.
இதற்கு வேறு தனிப்பட்ட காரணம் உள்ளது. நிச்சயமாக அவர் இதற்கு எந்த விதத்திலும் காரணம் இல்லை'' என்று பாடகி சுசித்ரா குறிப்பிட்டுள்ளார்.
நள்ளிரவுப் பார்ட்டிகளுக்குச் செல்லும் பழக்கமே தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ள சுசித்ரா, தனது ட்விட்டர் பக்கத்தை ஹக் செய்துள்ளவர்கள் தவறான முறையில் மற்றவர்களை பற்றி படங்கள் வீடியோக்களை பதிவேற்றி வருவதால் தான் பாதிக்க பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கம் ஹக் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையிடம் தெரிவித்துள்ள பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தை செயலிழக்க செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சுசித்ராவின் கணவரான நடிகர் கார்த்திக்கி "சித்ரா மிகுந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளார். அதனால் சுசித்ராவின் நிலையை முழுவதுமாகப் புரிந்து பிரச்னையைச் சரிசெய்ய குடும்ப உறுப்பினர்கள் முயற்சி செய்துவருகிறோம்," என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment