நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் நெடுவாசலுக்கு சென்று போராட்டத்தில் இணைந்து வருகிறார்கள். திட்டம் கைவிடப்படும் போராட்டத்தை கைவிடுங்கள் என்ற தமிழக முதலமைச்சரின் உறுதி மொழியை நம்ப முடியாது. மத்திய அரசு இத்திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள். தமிழக அரசாங்கம் எப்படியாவது போராட்டத்தை குழப்பி விடுவதற்கான வேலைகளை செய்து வருகிறது.
பாஜக கட்சியினர் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஆதரித்தும் போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்தியும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நெடுவாசல் கிராமத்துக்குச் சென்ற பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் நெடுவாசலை விட்டு ஹெச். ராஜா வெளியேற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியிருப்பதாக பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா தெரிவித்திருந்ததை இளைஞர்கள் குறிப்பிட்டு அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment