அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாநிலத்தில் எண்ணெய் குழாய்களை பதிக்கும் திட்டத்திற்கு அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப் அனுமதியளித்துள்ளார்.
இந்த திட்டத்தால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், குறைந்த செலவில் எரிவாயு கிடைக்கும் என்று டிரம்ப் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த திட்டம் அமெரிக்காவின் பூர்வீக குடிகளான செவ்விந்திய மக்கள் வாழும் இடங்களை ஆக்கிரமிக்க போகிறது. அந்த மக்களின் நிலங்களும் ஆறுகளும் காடுகளும் இந்த திட்டத்தினால் பறிக்கப்பட இருக்கின்றன. பூர்வ குடிகளான அந்த மக்கள் தமது சொந்த இடங்களைவிட்டு அகதிகளாக வெளியேற்றப்படப் போகிறார்கள் என சூழல் பாதுகாப்பு அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் எச்சரித்துள்ளன.
எனர்ஜி ட்ரான்ஸ்பெர் பாட்னர்ஸ் (Energy Transfer Partners) எனும் அமெரிக்க நிறுவனத்தின் அங்கமான டகோட்டா ஆக்சஸ் நிறுவனமானது (Dakota Access) அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாநிலத்தில் எண்ணெய் குழாய்களை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் காரணமாக அப்பிரதேசத்தின் நீர் வளம், நில வளம் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.
அம்மண்ணின் பூர்வீக குடிகளான செவ்விந்தியர்கள் இந்த திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராடினார்கள். ஒபாமா அரசாங்கமும், எண்ணெய் நிறுவனமும் போராடிய மக்கள் மீது கொடுமையான தாக்குதல்களை நடத்தினார்கள்.
ஆனால் தீவிரமான போராட்டம் காரணமாகவும், போராட்டக்காரர்களுக்கு அதிகரித்த ஆதரவின் காரணமாகவும் பதவிக்காலத்தில் இறுதியில் ஒபாமா இந்த திட்டத்தை நிறுத்தி வைத்தார்.
ஆனால் தற்போது புதிய அதிபரும் மல்டி பில்லியனருமான டிரம்ப் இந்த திட்டத்திற்கு அனுமதியளித்துள்ளார்.
உலகில் முதலாளிகளால் ஆளப்படும் நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. பெரும் பணக்காரர்களும், பன்னாட்டு கம்பெனி முதலாளிகளின் ஆதரவு உள்ளவர்களுமே அமெரிக்க அதிபராக வரமுடியும். அதிபர் மட்டுமல்ல அதிகாரத்தில் உள்ள அனைவருமே பெரும் முதலாளிகளால் முன்னிறுத்தப் பட்டவர்கள்தான்.
பதவிக்கு வருகின்றவர்கள் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவே ஆட்சி நடத்துவார்கள்.
எனவே முதலாளிகளின் இலாப வெறிக்கு சாதகமாக சட்டங்களை இயற்றுவதும் நடைமுறைப்படுத்துவதும் எதிர்ப்பவர்களை அழிப்பதும் அமெரிக்க அரசியல்வாதிகளின் அடிப்படை கொள்கையாக இருக்கும். இதனை டிரம்ப் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
வெள்ளையர்கள் பூர்வீக குடிகளை இலட்சக்கணக்கில் அழித்து உருவாக்கிய அமெரிக்காவில் சிறிய அளவில் எஞ்சியிருக்கின்ற அம்மண்ணுக்கு சொந்தக்காரர்கள் வஞ்சிக்கப்பட்டவர்களாகவே இன்றும் வாழ்கிறார்கள்.
தற்போது அமெரிக்க செவ்விந்தியர்கள் மீண்டும் ஒரு போராட்டத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment