இந்தியா

கமலை நோக்கி பாயும் வழக்குகள்



சசிகலாவின் தமிழக அரசாங்கத்தை நடிகர் கமல்ஹாஸன் கடுமையாக விமர்சித்து தொலைக்காட்சி நேர்காணல் வழங்கியிருந்தார்.
தற்போதுள்ள அரசாங்கத்திற்கு தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை. தவறான முறையில் ஆட்சிக்கு வந்துள்ளனர். எனவே உடனடியாக தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று அவர் அந்த நேர்காணலில் கூறியிருந்தார்

இதற்கு சசிகலா தரப்பு கடும் கண்டனத்தை தெரிவித்தது. பினாமி முதல்வர் என்று விமர்சிக்கப்படும் பழனிச்சாமி உட்பட சசிகலா தரப்பினர் பலரும் கமலை கடுமையாக தாக்கி அறிக்கை விட்டிருந்தனர்.
கமலை முடக்குவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் தீவீரப்படுத்த முன்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேலைகள் வந்துள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் இரட்டை இலையையும் கட்சியின் பெயரையும் பயன்படுத்த சசிகலா தரப்புக்கு தடைவித்தித்துள்ளது.

இவ்வாறன சிக்கல்களில் சசிகலா தரப்பு சிக்கி இருப்பதால் கமலை பின்னர் கவனித்துக்கொள்வோம் என்று சற்று லூசில் விட்டுள்ளனர்.

ஆனாலும் வேறு வகையில் கமலை தாக்கும் நடவடிக்கைகளை சசிகலா தரப்பு தூண்டி வருகிறது.
  
மகாபாரதம்குறித்து நடிகர் கமல்ஹாசன் அவதூறாகப் பேசியதாக கும்பகோணம் மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கமல்ஹாசன் மகாபாரதத்தை இழிவு படுத்தியதாகவும் இது இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறி இந்து அமைப்புகள் கமலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. அதைத்தொடர்ந்து இப்போது ஆதிநாத சுந்தரம் என்பவர் கமலுக்கு எதிராக  வள்ளியூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலா என்பவரும் கும்பகோணம் மாவட்ட நீதிமன்றத்தில் கமலுக்கு எதிராக இன்று  வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரதானந்தா என்ற சாமியார் பெங்களூரு காவல்நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் மகாபாராதத்தை அவமதித்ததாக புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் நடிகர் கமல்ஹாசன் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கமல்ஹாசன்
''உடனடியாக தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும். இதுவே தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வாக அமையும். தம்மை யார் ஆள வேண்டும் என்று மக்கள் தீர்மானிக்கட்டும். தேர்தலுக்கு செலவு  அதிகம் என்று கூறுவதெல்லாம் பொருந்தாது. கட்சிகளின் விளம்பர செலவுகளை விட வாக்குக்கு பணம் கொடுப்பதே அதிக செலவாக உள்ளது. தேர்தல் செலவுதான் என்ற போதும் சிலநேரங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. சட்டதிட்டங்களை வைத்துக்கொண்டு கட்டாயம் நான்கு வருடம் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வது, கட்டாய கல்யாணம் போன்றது'' என்று தெரிவித்திருந்தார்.

''காசு வாங்கிக்கொண்டு வாக்கு போடுவது ஊழல் அரசாங்கம் அமைவதற்கு அடிப்படையாக உள்ளதுவாக்கை விற்றபின்னர் தட்டி கேட்கும் உரிமையை இழந்துவிடுகிறோம். வாக்கை விற்ற பின்னர் எப்படி கேள்வி கேட்க முடியும். நான் வரி காட்டாமல் விட்டுவிட்டு உங்களை கட்டு என்று கூற முடியாது. அதுபோல தனிப்பட்ட ஒவ்வொருவரும் நேர்மையாக ஊழல் இல்லாமல் இருக்க வேண்டும்'' என்றும் கமல் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து வெற்றி பெற்றது பற்றியும் கமல் இந்த நேர்காணலில் சுட்டிக்காட்டினார்.

''அப்போது ஆட்சி பொறுப்பில் இருந்த அந்த  அரசியல்வாதியே விஸ்ரூபம் வெளியாவதில் சிக்கலை ஏற்படுத்தினார். பின்னர் அவர் மீடியாவை கூப்பிட்டு 40 நிமிடங்கள் விளக்கம் கொடுத்தார். ஆனால் நான் அவரை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்று வெற்றி பெற்றேன்.
மற்றவர்களுக்கும் அவரால் பிரச்சனை இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பயத்தினாலோ அல்லது ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கி போயிருக்கலாம். ஆனால் நான் அப்படி மௌனமாக இருக்கமாட்டேன்.
தணிக்கை குழுவுக்கு சிலர் பணம் கொடுக்கிறார்கள். ஆனால் நான் சத்தியமாக கொடுத்ததில்லை.  
எதிர்த்து நின்றால் யாரும் எம்மை அடக்க வர மாட்டார்கள். ஆனால் திரையுலகில் உள்ளவர்கள் பிரச்சனை வேண்டாம் சார் என்று பணத்தை கொடுத்துவிட்டு போகிறார்கள். இது கேவலமான நிலை''.  

''நான் மாற்றம் கொண்டுவருவதற்கான கருவியாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். திரைப்பட விமர்சனம் செய்பவர் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதுபோல அரசியலை விமர்சனம் செய்யும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அவசியமில்லை. ஆனால் நான் விழிப்பாக இருப்பேன். மக்கள் நலன் குறித்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன்''

'' ஜல்லிக்கட்டு என்பது பல பிரச்சனைகளால் கொதித்து போயிருந்த இளையவர்களும் மக்களும் கொதித்து எழும்பிய ஒரு புள்ளியே. அது வெறும் மாடு பிடிப்பதற்கான போராட்டம் மட்டுமல்லஎன்றும் அந்த நேர்காணலில் கமல்ஹாசன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






0 comments:

Post a Comment

Powered by Blogger.