தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு நாங்கள் காரணம் அல்ல என இலங்கை தெரிவித்துள்ளது.
6ஆம் திகதி திங்களன்று கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 21 வயது மீனவர் பிரிட்ஜோ மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
அப்போது அருகில் இருந்த மேலும் இரு மீனவர்கள் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவத்திற்கு இலங்கை கடற்படையே காரணம் என்று தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு தமிழக மீனவர்களும் அமைப்புகளும் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் இந்த தாக்குதலை தாம் நடத்தவில்லை என்று இலங்கை மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளதுடன் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டும் உரையாடியுள்ளார்.
இந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்குமிடையில் விரிசல் நிலை ஏற்படக்கூடாது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 85 தமிழக மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 146 படகுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
700 ற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று நூற்றுக்கணக்கான படகுகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எதனையும் இந்திய மத்திய அரசு இதுவரை எடுக்க்கவில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
0 comments:
Post a Comment