அரசியல்

கொலைகளுக்கு பின்னணியில் இருந்தது கோட்டாபே - முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா



நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் கோட்டபாய ராஜபக்ச, முன்னாள் தேசிய புலனாய்வுத்துறையின் தலைமை அதிகாரி கபில ஹெந்த விதாரன ஆகிய இருவரும் இணைந்து தனி குழுவாக செயல்பட்டனர்
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடந்த பல கொலைகள் கடத்தல்களுக்கு இவர்களே காரணம். இவ்வாறு இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம் சாட்டினார்.

தற்போதைய அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவுள்ள சரத் பொன்சேகா ''குற்றங்களில் ஈடுபட்ட ஒரு சில படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள போதும் விசாரணைகள் மிகவும் மந்தமாகவே நடைபெறுகின்றன. விசாரணைகள் விரைவாகவும் ஆழமாகவும் இடம்பெற வேண்டும். உயர் அதிகாரி, கீழ்நிலை அதிகாரி என பார்க்க முடியாது யாராக இருந்தாலும் சட்டத்தை மீறியவர்கள்   சட்டத்தை எதிர்கொண்டே ஆகவேண்டும்.

இதேவேளை கடந்த ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு விசாரணை இடம்பெறுகிறது. இந்த நடவடிக்கை நாட்டை பாதுகாத்த படையினரை காட்டிக்கொடும் செயல் என்று மகிந்த ராஜபக்ஷ தரப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.


ஆனால் அந்த நடவடிக்கைகள் நீதியை நிலை நாட்டவே இடம்பெறுகிறன என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.