இலங்கை பாராளுமன்றில் குழப்பம்
இலங்கை பாராளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன பெரும் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் தனது சகாவாவும் குழப்பவாதியுமான விமல் வீரவன்சவுடன் இணைந்து தொடர்ந்தும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பலமுறை பாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது. இருந்தபோதும் மீண்டும் மீண்டும் விமல் வீரவன் மற்றும் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட கூட்டு எதிரணியினர் ஒழுங்கு பிரச்சினைகளை முன்வைத்து சபையில் குழப்பத்தை ஏற்படுத்தினார்.
தேசிய சுதந்திர முன்னணியை நாடாளுமன்றில் ஒரு கட்சியாக அங்கீகரிக்குமாறு விமல் வீரவன்ச விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர் தேசிய சுதந்திர முன்னணி தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சி அல்லவெனவும் ஆகவே இந்த கோரிக்கையை ஏற்கமுடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியை நாடாளுமன்றில் ஒரு கட்சியாக அங்கீகரிக்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தமைக்கு தினேஸ் குணவர்த்தன கடும் எதிர்ப்பு தெரிவித்து குழப்பத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து அவரை வெளியேற்றும் தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தீர்மானம் 63 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தினேஸ் குணவர்த்தனவை பாராளுமன்றிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். ஒரு வாரம் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்துக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment