ஒரு கோடி போராளி லாரன்ஸ் நடித்த மொட்டை சிவா கெட்ட சிவா படத்தை பார்த்தவர்கள் தியேட்டலிருந்து சிதறி ஓடுவதாக கூறுகிறார்கள். படத்தை பார்த்த சிலர் கூறும் போது லாரன்சின் இந்த படம் பத்து பாலகிருஷ்ணாவின் தெலுங்கு படங்களுக்கு சமம் என்று கதறுகிறார்கள்.
பிஜிஎம்மை தெறிக்க விட்டு லாரன்ஸ் நடக்கிறார்.. அடிக்கிறார்.. பன்ச் டயலாக் பேசுகிறார்..நடக்கிறார்.. மீண்டும் நடக்கிறார்.. அடிக்கிறார்.. பன்ச் டயலாக் பேசுகிறார்..நடக்கிறார்..
இப்படியே படம் முழுவதும் குரங்கு சேட்டை செய்கிறார் லாரன்ஸ்.
தமிழ் திரைப்படங்கள் இப்போது கொஞ்சம் தரமாக வர தொடங்கியுள்ளன. தமிழ் ரசிகர்களும் இப்போது முன்பு போல இல்லை. தரமான ரசனை அவர்களிடம் உள்ளது.
ஆனால் லாரன்ஸ் தெலுங்கு படங்களையே மிஞ்சும் மசாலாவை கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் தமிழ் ரசிகர்கள் தலையில் அரைக்க பார்க்கிறார்.
படம் கொடுமையாக இருக்கிறது. உயிர் தப்பி ஓடிவந்தோம் என்கிறார்கள் பார்த்தவர்கள்.
0 comments:
Post a Comment